Saturday, December 1, 2007

அற்புதம் தெரியும் நிற்புதம் தெரியுமா........

இன்று நாம் விளையாடும் செஸ் (சேத்தா) என்ற விளையாட்டு பண்டைய காலத்தில் தமிழகத்தில்தான் சேத்தா என்பவர். கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அது எந்த காலகட்டத்தில் என்று தெரியவில்லை. ஒருவேளை ஆழிப்பேரலையில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் இருந்த காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டிருக்கலாம்.

இந்த சாதுர்யமான விளையாட்டைக் கண்டு பிடித்த சேத்தன் என்பவரை பாராட்டி பரிசளிக்க விரும்பினான் மன்னன் .

அரசன் : நீ அதி புத்திசாலி. மக்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் ஒரு அருமையான விளையாட்டைக் கண்டு பிடித்திருக்கிறாய். இதற்காக உனக்கு நான் பரிசளிக்க விரும்புகிறேன். நீ விரும்புவதைக் கேள்.

அவன் : நான் எந்த பரிசையும் எதிர்பார்க்கவில்லை மன்னா

அரசன்: இல்லை நீ எனது பரிசை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

அவன் : மன்னிக்க வேண்டும் மன்னா. எனக்கு எதுவும் வேண்டாம்

அரசன் : எனது பரிசை மறுக்காதே. கேள் உனக்கு என்ன வேண்டும்?.

அதற்குமேலும் மன்னரின் சொல்லை மறுக்க முடியாது என்று தெரிந்தவன்

“மன்னா சதுரங்கப் பலகையின் முதற்கட்டத்தில் எனக்கு ஒரு கோதுமை தானிய மணி தரவேண்டும்" என்று ஆரம்பித்தார் சேத்தன்.


"என்ன ஒரே ஒரு தானிய மணியா" மன்னனால் தனது காதுகளையே நம்ப முடியவில்லை.

"மன்னனே முதற்கட்டத்தில் ஒரு தானிய மணி போதும். இரண்டாவது கட்டத்தில்இரண்டு தானிய மணிகள், மூன்றாவது கட்டத்தில் நான்கு தானிய மணிகள், நான்காவது கட்டத்தில்எட்டு தானிய மணிகள் என்று முதலாவது கட்டத்தைப் போல் இரண்டு மடங்கு அடுத்த கட்டங்களில் வருமாறு64 கட்டங்களிலும் நிரப்பித் தாருங்கள்."

"போதும் நிறுத்தும். எனது கொடைத் திறனுக்கு ஏற்றதல்ல உமது வேண்டுகோள். இப்படி ஒரு அற்ப வெகுமதியைக் கேட்டு என்னைக் களங்கப் படுத்தி விட்டீர். நீர் போய்ச் சேரும். எனது சேவகள் தானிய மூட்டைகளை உமது இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பான்"

சேத்தன் அங்கிருந்து சென்று விட்டான்.சிறிது நேரம் கழித்து மந்திரியை அழைத்து, " சேத்தன் கேட்ட அற்ப வெகுமதியைக் கொடுத்தாகி விட்டதா?" என்று விசாரித்தார் மன்னர்.

"அரசவைக் கணக்கர்கள் சேத்தனுக்குக் கொடுக்க வேண்டிய தானிய மணிகளை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்." என்றார் மந்திரி. மன்னன் முகம் சுழித்தான்.தனது கட்டளையை நிறைவேற்றுவதற்கு ஏன் இந்த தாமதம் என்று கடிந்து கொண்டான்.

பல நாட்களாகியும் அவன் கேட்ட பரிசுக் கொடுக்கப் படவில்லை. காரணம். அவன் கேட்ட கோதுமையின் அளவை எளிதாக யாராலும் கணக்கிட முடியவில்லை. இறுதியில் ஒரு வழியாகக் கண்டு பிடித்தவிட்டார்கள். ஆனாலும் அவனுக்குப் பரிசு கொடுக்கவில்லை. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. மந்திரியை அழைத்துக் கேட்டார். “ அவன் கேட்ட பரிசை ஏன் இன்னும் கொடுக்கவில்லை.”

மன்னா அவன் கேட்ட அளவு நம்மிடம் இல்லை.”

“ அப்படியா! அது என்ன அளவு?”


சேத்தா கேட்டபடி 1, 2, 4, 8,16, 32, 64,128....... என்று கணக்கிட்டு அனைத்தையும் கூட்டினால்வரும்

அளவு இதுதான். இதற்கு அசுர எண் என்று பெயர் 1,84,46,74,40,73,70,95,51,615

அதாவது ஒரு மகா சங்கம் 84 சங்கம் 46 மகாகருவம் 74 கருவம் 40 நிற்புதம் 73 அற்புதம் 70 கோடியே 95 லட்சத்து 51 ஆயிரத்து அறுநூற்று பதினைந்து.

கொள்ளவில் பார்த்தால் அகலம் 4மீட்டர் நீளம் 10மீட்டர் உயரம் 30 கோடி மீட்டர். அதாவது 12000 கன கிலோமீடடர்.

நமது பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரத்தைப் போன்று இரண்டு மடங்கு. பரிசு எளியது என்று நினைத்த மன்னன் அசந்து போய் நின்றான்.

எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் அற்பமானது எளிதானதுஎன்று நினைக்கலாமா?


தமிழின் அற்புத எண்களை பலவற்றை அறிவோமே!

இப்படித் தமிழில் சங்கம், மகா சங்கம், பதும சங்கம் என்றெல்லாம் எண்ணிக்கைக் கணக்குகள் வருகின்றன. இந்த எண்ணிக்கை அளவுகளை தேறையர் தான் பாடிய வைத்திய காவியத்தில் குறிப்பிடுகிறார்.

இங்கு நாம் அந்த எண்ணிக்கைகளின் அளவுகளைப் பார்ப்போம்
100 ஆயிரம் என்பது ஒரு லட்சம்
100 லட்சம் - ஒரு கோடி
100 கோடி - ஒரு அற்புதம்
100 அற்புதம் - ஒரு நிற்புதம்
100 நிற்புதம் - ஒரு கருவம்
100 கருவம் - ஒரு மகா கருவம்
100 மகா கருவம் - ஒரு சங்கம்
100 சங்கம் - ஒரு மகாசங்கம்

ஒரு சங்கம் என்பதை எண்ணால் எழுதும்போது ஒன்று போட்டு பக்கத்தில் 17 சைபர் போடவேண்டும்.
இதே போல்

பதும சங்கம்
பருவம்
பெரிய அற்புத பருவம்
நிற்புத பருவம்
கருவ பருவம்
மகா கருவ பருவம்
சங்க பருவம்
மகா சங்க பருவம்
பதும சங்கம்
திரிசங்க பருவம்
அனந்த சங்கம்
சாகரம்
சாகர கருவம்
மகா சாகர கருவம்
கருவ சங்க சாகரம்
பதும சங்க சாகரம்
அனந்த சங்க சாகரம்
திரி சங்க சாகரம்
மகா சங்கம்
அக்ஷ்க்ஷோணி
க்ஷோணி
மகாக்ஷோணி
கருவ க்ஷோணி
அனந்த கருவ க்ஷோணி
சங்க கருவ க்ஷோணி
மகா சங்க க்ஷோணி
திரிசங்க க்ஷோணி
அனந்த மகா க்ஷோணி
மகா பதும க்ஷோணி
திரிசங்க பதும க்ஷோணி
சங்கத்தின் க்ஷோணி
வெள்ளம்
அற்புதத்தின் வெள்ளம்
நிற்புதத்தின் வெள்ளம்
கருவத்தின் வெள்ளம்
மகா கருவ வெள்ளம்
சங்க வெள்ளம்
மகா சங்க வெள்ளம்
பதும சங்க வெள்ளம்
திரி சங்க வெள்ளம்
அனந்த சங்க வெள்ளம்
அற்புதத்தின் பருவ வெள்ளம்
சங்க பருவ வெள்ளம்
பதும சங்க பருவ வெள்ளம்
மகா சங்க பருவ வெள்ளம்
திரி சங்க பருவ வெள்ளம்
அனந்த சங்க பருவ வெள்ளம்
வாகினி
பதும வாகினி
அனந்த வாகினி
மகா வாகினி

1 போட்டு பக்கத்தில் 43 சைபர் போட்டுப் பாருங்கள். இந்த அளவின் பெயர் என்ன தெரியுமா? ஒரு சாகரம்

அதே போல் ஒன்று போட்டு 61 சைபர் போட்டால் சோணி
83 சைபர் போட்டால் வெள்ளம்
115 சைபர் போட்டால் வாகினி
121 சைபர் போட்டால் மகாவாகினி

எண்களுக்குரிய இந்த அபூர்வ வார்த்தைகளைப் பார்த்தால் தமிழை எப்படிப் போற்றுவது என்று தெரியாமல் சற்று வியப்புதான் ஏற்படுகிறது அல்லவா.
தமிழை நேசிக்கக் கற்றுக் கொண்டால் நாம் தமிழில் உள்ள அற்புதங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்
.


கனிஷ்கா, தென்காசி.


Instant dynamic Tamil News Portal